Thursday, May 15, 2008

மே 15th செய்தி

உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்கு தயவு கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும். - யாத் 33:13


அறிவது என்ற பதம் திருமறையில், ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கற்பவதியாகி , காயீனை பெற்றாள். அறிவது என்பது எப்படி திருமணமான புருஷன் தன் மனைவியை அறிகிறானோ, அப்படி ஐக்கியபடுவது ஆகும். நம்முடைய ஜெபம் தேவனுடைய கிருபையை தேவனை அறிவதற்காக கேட்பதாக இருக்கவேண்டும். இன்டிமேசி என்ற ஆங்கில பதம் சரியானதாகும். தேவனாகிய கர்த்தரை அறியும் பொழுது நமக்கு அற்புதம், சுகம், பெலன், பரிசுத்தம், ஆசீர்வாதம் போன்ற குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் நாம் ஆசிர்வாதங்களை அல்ல ஆசிர்வாதங்களை தரும் ஆண்டவரை பற்றிக்கொள்வதை தான் அவர் விரும்புகிறார்.

No comments: